2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஹன்சியுடன் இரண்டாவது தடவை ஜோடி சேரும் கெத்து

George   / 2015 ஜூலை 08 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஓகே. ஓகே திரைப்படத்துக்கு பின்னர் மீண்டும் ஹன்சிகாவுடன் ஜோடி சேரவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், நாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அப்போதைய முன்னணி நடிகையான ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்தஇது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய திரைப்படங்களிலும் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.

மற்ற முன்னணி ஹீரோக்கள் அளவுக்கு தனது ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர் உதயநிதி. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் கெத்து திரைப்படத்திலும் முன்னணி கதாநாயகி எமி ஜாக்சனுடன் தான் ஜோடி சேர்ந்திருக்கிறார். 

என்றென்றும் புன்னகை இயக்குநர் அகமது இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தில் மீண்டும் ஹன்சிகாவை தனது ஜோடியாக்கியிருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .