Administrator / 2015 ஜூலை 13 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜோடியாக பொலிவூட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்ரீனா கைஃப், ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடிக்க வேண்டியவர். அந்த நேரத்தில் சில காரணங்களால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போனது. பிறகு அந்த வாய்ப்பு தீபிகா படுகோனே வசம் சென்றது.
இந்நிலையில் தான் எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க கத்ரீனா கைஃப்புடன் அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் சந்தித்து பேசியுள்ளாராம். இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கப்போவதுடன் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளனராம்.
தற்போது, மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு கத்ரீனாவுக்கு தேடிவந்து கிடைத்துள்ளது. அதை அவர் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 'எந்திரன்' 2ஆம் பாகத்தை இந்த வருடத்தின் இறுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளதுடன் 'கத்தி' திரைப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago