Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 19 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரின் இரண்டு திரைப்படங்களின் இசைம மற்றும் திரைப்படம் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது.
ஜெயம் ரவி நாயகனாக நடித்த ரோமியோ ஜூலியட்; திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் திரைப்படம் ஓரளவிற்கு வசூல் செய்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவருடைய இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து வெளியிடும் முடிவிற்கு இரண்டு திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவி, சுமார் இரண்டு வருடங்களாக அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்துள்ள தனி ஒருவன்; திரைப்படத்தின் இசையை ஜூலை 22ஆம் திகதியும், திரைப்படத்தை ஓகஸ்ட் மாதமும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
அநேகமாக ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தப் திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக ஜூலை 20ஆம் திகதியான இன்று அவர் நடித்துள்ள மற்றொரு திரைப்படமான சகலகலா வல்லவன் திரைப்படத்தின் இசையை வெளியிடவுள்ளனர்.
திரைப்படத்தை ஜூலை மாதம் 31ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளனர். இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு திரைப்படங்களின் இசையும், சுமார் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு திரைப்படங்களும் வெளியாவது நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் நடக்கும் விஷயம்.
இருந்தாலும் ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோ ஒருவரின் திரைப்படம் இப்படி குறுகிய இடைவெளிக்குள் வெளிவருவது ஆரோக்கியமான விஷயமல்ல என கோடாம்பாக்க வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
28 minute ago
29 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
1 hours ago
5 hours ago