2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'நமக்கு காதல் திருமணம்தான் பாஸ்'

George   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம்தான். ஏதோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். எனது மனதுக்கு பிடித்தமான பெண்ணை, எவ்வளவு நாட்கள் ஆனாலும் தேடிக் கண்டுபிடித்து, அவரை காதலித்து, அதன்பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

தனது திருமணம் குறித்து கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுடன் எப்போதும் நெருக்கமாக பழகுவதால் ஆர்யாவையும், அவருடன் நடிக்கும் நடிகைகளையும் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும்.

தமிழ் சினிமாவிலேயே நடிகைகளுடன் இணைத்து அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் பட்டியலில் ஆர்யாவுக்குதான் முதலிடம். 

இந்த கிசுகிசுக்களுக்கு முடிவுகட்ட ஆர்யாவின் பெற்றோர் பெண் தேடும் படலம் நடத்திக் கொண்டுள்ளதாக தகவல்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .