George / 2015 ஜூலை 27 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

களவாணியில் விமல் நடித்தது போன்று சண்டிவீரன் திரைப்படத்தில் அதர்வா, கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். கிராமத்து வாசனையே இல்லாமல் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த அவருக்கு அந்த சூழல் ரொம்பவே பிடித்து விட்டதால் சில மாதங்களாக லுங்கி, பனியன் அணிந்த கிராமத்து பையனாக சண்டிவீரனில் அதிக ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.
அந்த திரைப்படத்தையடுத்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், இப்போது மும்பை அழகி பூஜா ஜாவேரி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த பூஜா ஜாவேரி இதையடுத்து ரோமியோ ஜூலியட் திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறாராம். அருள்நிதி நடித்த தகராறு திரைப்படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இந்த திரைப்படத்தை இயக்குகிறாராம்.
மேலும், 5.6 அடி உயரம் கொண்ட பூஜா ஜாவேரி இந்தி நடிகை மாதுரிதீட்ஷின் தீவிரமான ரசிகையாம். அதனால் அவரை ரோல்மாடலாக கொண்டே நடிக்கப்போகிறாராம். அதோடு, கிளாமரைப்பொறுத்தவரை கதையும், இயக்குநர்களும் எடுப்பதுதான் முடிவாம். தனது சார்பில் எந்த நிபந்தனையும் இல்லை என்கிறார் இந்த மும்பை புயல் பூஜா ஜாவேரி
8 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago