2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமன்னாவை குறிவைக்கும் கவர்ச்சி மழை

George   / 2015 ஜூலை 27 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூதுகவ்வும் புகழ் கொமடி நடிகரான கருணாகரன் ஹீரோவாக நடிக்கவுள்ள கணணீர் அஞ்சலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பை வரவு நடிகை ப்ராஷி சின்ஹா ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் ஒரே ஒரு திரைப்படத்தில் மாத்திரம் நடித்துள்ள சின்ஹாவின் நடிப்பை பார்த்து விட்டுத்தான் இந்த திரைப்படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்களாம். 

தன்னைப்போலவே மும்பையில் இருந்து வந்து பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் தமன்னாவைப்போன்று சினிமாவில் நடிக்க விரும்புவதாக ப்ராஷி சின்ஹா கூறியுள்ளார்.

அத்துடன் ஒருபடி மேலேபோய், பையா உள்ளிட்ட சில திரைப்படங்களில் தமன்னா நடித்தது போன்று கவர்ச்சிகரமாக நடிக்க தான் தயாராக இருப்பதாகவும கூறி கோலிவூட்டின் கமர்சியல் இயக்குநர்கள் மனதில் பாலை வார்த்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X