George / 2015 ஜூலை 27 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தியில் வெளிவந்த 'தி டர்டி பிக்சர்ஸ்', 'கஹானி' ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் பொலிவூட் நடிகை வித்யாபாலன். இவர் நடித்த இந்த இரண்டு திரைப்படங்களுமே இந்தியில் பொக்ஸ் ஒபிசில் சக்கை போடு போட்டது. இந்த திரைப்படங்களுக்கு பின்னர், திருமணம் செய்துகொண்ட வித்யாபாலனுக்கு தொடர்ந்து ஹிந்தியில் திரைப்படங்கள் சரிவர ஓடவில்லை.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'ஹமாரி அதுரி கஹானி' என்ற திரைப்படம் அவருக்கு தோல்வி திரைப்படமாக அமைந்தது. இருப்பினும் வித்யாபாலனின் மார்க்கெட் இன்னும் சரிந்தபாடில்லை.
உதாரணம், இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலனை நடிக்க வைக்க அவருக்கு 18 கோடி இந்திய ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
வித்யாபாலன் நடித்த திரைப்படங்கள் அண்மைகாலமாக ஓடவில்லையென்றாலும், அவர் திறமையான நடிகை. தத்ரூபமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களில் அவர் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்தவர்.
அதனாலேயே இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் வித்யாபாலனுக்கு இவ்வளவு தொகை சம்பளமாக பேசியிருப்பதாக பொலிவூட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
49 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
5 hours ago