2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குதிரையேற்றத்தில் அசத்திய எமி

George   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபுதேவா இயக்கும் சிங் இஸ் பிலிங் திரைப்படத்துக்கான குதிரையேற்ற பயிற்சியின் போது அசத்திய எமி ஜாக்சனை கண்டு திரைப்படக்குழுவினரே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

சிங் இஸ் பிலிங் திரைப்படத்தில், எமி ஜாக்சனின் ஆரம்ப காட்சியில், அவர் குதிரையேற்ற வீரராக நடிக்கவுள்ளார். இதற்காக, குதிரையேற்ற பயிற்சி பெறுமாறு எமி ஜாக்சனுக்கு, பிரபுதேவா அறிவுறுத்தியிருந்தார். 

எமி ஜாக்சனின் தாய், லிவர்பூல் உள்ளிட்ட பல்வேறு ரோமானிய குதிரையேற்ற பயிற்சி மையங்களில் பயிற்றுநராக பணியாற்றியுள்ளதால், எமி ஜாக்சன சிறு வயதிலேயே, குதிரையேற்ற பயிற்சி பெற்றிருந்தார். 

இதன்காரணமாகவே, குதிரையேற்ற பயிற்சியை விரைவில் பெற்று தன்னால் பிரகாசிக்க முடிந்ததாக, எமி ஜாக்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா இயக்கும் இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கே கே மேனன், லாரா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .