2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கைகுலுக்கும் டார்லிங்

George   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டார்லிங், யாகவராயினும் நாகாக்க ஆகியத் திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணி அதையடுத்து, பாபிசிம்ஹாவுடன் கோ-2, ஜீவாவுடன் கவலை வேண்டாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படங்களில் நடிக்கும்போதே இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்றும் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

ஆனால், தற்போது அவருக்கு எழில் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் திரைப்படவாய்ப்புதான் கிடைத்திருக்கிறது. அதேசமயம், கோலிவூட்டிலுள்ள இயக்குநர்கள் பெரும்பாலும் தனக்கு பழக்கம் இல்லாதவர்களே என்பதால், தற்போது சில பிரபல இயக்குநர்களுடன் நட்பு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார் நிக்கி.

அப்படி இயக்குநர்களிடம் கைகுலுக்கு நட்பு வளர்க்கும் நிக்கி கல்ராணி, தமிழில் நான் நடித்த இரண்டு திரைப்படங்களுமே வெற்றி திரைப்படங்கள்தான். அதனால் இங்கு அதிக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று சொல்லி, உரிமையோடு வாய்ப்பு கேட்கிறாராம். 

நிக்கி கல்ராணியின் இந்த பேச்சு இயக்குநர்களை கவர்ந்து வருவதால், அடுத்தடுத்து மேலும் சில புதிய திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் நிலை அதிகரித்துள்ளதாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .