2025 மே 17, சனிக்கிழமை

அச்சத்தில் அனுஷ்கா

George   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினிமாவில் கதாபாத்திரங்களுக்காக உடல் எடையை கூட்டி குறைப்பது எல்லோரும் செய்கிற விசயம்தான். ஆனால், இஞ்சி இடுப்பழகி திரைப்படத்துக்காக அனுஷ்கா செய்திருப்பது அதிகம் என்கிறார்கள்.

அதாவது, கிட்டத்தட்ட அவர் சின்ன வீடு திரைப்படத்தில் நடித்த கல்பனாவை மாதிரியே இருப்பதாக திரையுலகில் கருத்து பரவியுள்ளது.

அதோடு, சில நடிகைகள் அனுஷ்காவை தொடர்பு கொண்டு, கதைக்காக முழுவதுமாக அவர் தன்னை மாற்றிக்கொண்டதை பெருமையாக சொன்னாலும், ஏறின உடம்பை குறைப்பது ரொம்ப கடினமான விடயமாயிற்றே. இப்படித்தான் சின்ன வீடு திரைப்படத்துக்காக உடம்பை பெருக்க வைத்த கல்பனாவினால் அதன்பிறகு உடம்பை குறைக்கவே முடியவில்லையாம். அதேநிலை உங்களுக்கும் ஏற்பட்டால் சிக்கலாகி விடுமே என்கிறார்களாம்.

இதனால் இதுவரை இதெல்லாம் சினிமாவுக்காக தான் செய்கிற தியாகம் என்கிற மனநிலையில் இருந்து வந்த அனுஷ்காவுக்கு இப்போது மனதளவில் புளியை கரைத்துள்ளதாம். ஒருவேளை உடம்பு பழைய நிலைக்கு வர மறுத்தால் என்ன செய்வது என்ற அச்சத்துடனேயே நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

அதனால், மேற்கொண்டு எடையை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்த்து வரும் அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடித்து முடித்ததும் கடும் டயட்ஸ், ஜிம் பயிற்சி என்று மாதக்கணக்கில் இறங்கப்போகிறாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .