2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சிம்புவால் கடுப்பான நயன்

George   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாலு திரைப்படம் தொடர்பான பஞ்சாயத்துக்களை சமாளித்து ஒரு வழியாக திரைப்படத்தை வெளியிட்டுவிட்டார் டி.ராஜேந்தர். விடுமுறை நாட்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை வரை வாலு திரைப்படத்தின் வசூலுக்கு எந்த பாதகமும் இல்லை.

இந்நிலையில்,  டி.ராஜேந்தருக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகிவிட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இது நம்ம ஆளு திரைப்படம் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் உள்ளது.

தயாரிப்பாளரான டி.ராஜேந்தர், பாண்டிராஜிடம் போட்ட ஒப்பந்தத்தின்படி பணம் கொடுக்கவில்லை. அதனால் பல தடவை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக நயன்தாராவிடம் வாங்கிய கோல்ஷீட்டை பயன்படுத்தாமல் சுமார் பத்து தடவைக்கு மேல் வீணடித்திருக்கின்றனர்.

அவருக்கு தர வேண்டிய சம்பள மிகுதியையும்; கொடுக்கவில்லை. இந்த பிரச்சனைகளை மனதில் வைத்து இது நம்ம ஆளு திரைப்படத்துக்கு இனி கோல்ஷீட் தரவே மாட்டேன் என்று பாண்டிராஜை அழைத்து கறாராக சொல்லிவிட்டாராம் நயன்தாரா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X