Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் என அறிவிக்கப்பட்ட '3 இடியட்ஸ்' படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் அதிரடியாக அப்படத்திலிருந்து தான் விலகிக்கொள்வதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக செய்திகள் பரவியிருக்கின்றன. இவ்வறிவிப்பு தொடர்பில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இப்படத்திலிருந்து விஜய் விலகியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று ஆடை விடயம். இப்படத்தில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஆடை வடிவமைப்பு சுத்தமாக விஜய்க்கு பிடிக்கவில்லையாம். அடுத்ததாக விஜயின் தலைமுடி அழகினை மாற்றும்படி இயக்குநர் ஷங்கர் கூறியிருக்கிறார். 'வேலாயுதம்' படப்பிடிப்புகள் நிறைவடையாத நிலையில் அப்படத்திற்காக மாற்றியிருக்கும் தனது 'ஹெயார் ஸ்டைல'ஐ மாற்றும்படி கோருவரு முறையல்ல என்று விஜய் குறிப்பிட்டுள்ளாராம்.
இதனால் இயக்குநர் ஷங்கரும் நடிகர் விஜயும் நண்பர்களாக பிரிவதென்று முடிவுசெய்துள்ளனராம். மறுபடி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவரும் இணையலாம் என்று கூறியிருக்கிறார்களாம். இதனால் மற்றொரு நடிகரை '3 இடியட்ஸ்' படத்திற்காக ஷங்கர் தேடுகிறாராம்.
Mohamed Tuesday, 07 December 2010 10:46 PM
தனக்கு தானே குழி வெட்டுவது என்பது இதற்கு தானோ
Reply : 0 0
yarro oruvan Thursday, 09 December 2010 03:03 AM
அப்படி இல்லை,இமேஜ் பிரச்சினைதான் இது முஹமத்.சம்பளம் கூடுதலா கிடைத்தால் இவர் மீண்டும் வருவர்.எது எப்படியோ three idoits, two idoits இல் முடியும்.
Reply : 0 0
sankar rasihan Friday, 10 December 2010 04:38 AM
சங்கர் இயக்குகிற படம் தோல்வி அடைய கூடாது என்று நினைத்து இருக்கிறாரு போல .....
Reply : 0 0
trisha Monday, 17 January 2011 06:52 PM
விஜய் விலகவில்லை. மறுபடியும் வருவாரு அப்போ தெரியும் எல்லாருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025