2025 மே 21, புதன்கிழமை

31ஆம் திகதி எந்திரன் பாடல்கள் வெளியீடு

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


பலராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிக்கும் இந்திரைப்படத்தின் பாடல்கள் எதிர்வரும் 31ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மிகவும் கோலாகலமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், அமிர்தா பச்சன், ஷங்கர் உட்பட பல பிரபல்யங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பல ஹொலிவூட் நடிகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 3000 திரையரங்குகளில் எந்திரன் திரைப்படம் திரையிடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும். ஸ்பைடர்மான் திரைப்படத்தின் பின்னர் அதிகமான திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படம் எந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .