S.Renuka / 2026 மார்ச் 15 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் திரையுலகின் மூத்த நடிகை நீனா குப்தா தனது கணவருடன் ஐதராபாத் நகரில் நடைபெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா -நடிகர் விஜய் தேவரகொண்டா திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் இணைந்து நின்றபடி புகைப்படங்களுக்கு காட்சி அளித்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆனால், அந்த படங்களில் நீனா குப்தாவின் வயிற்றுப் பகுதி சற்று பெரிதாக தெரிந்ததை பார்த்த சிலர், அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனால் 66 வயதான நடிகை குறித்து கர்ப்பம் பற்றிய வதந்தி காட்டுத்தீ போல பரவியுள்ளது.இதற்கு விளக்கம் அளித்த நீனா குப்தா, “அப்படி எதுவும் இல்லை. திருமண விழாவில் நான் அணிந்திருந்த சேலையின் துணி சற்று தடிமனாக இருந்ததால் தான் நான் குண்டாகத் தெரிந்தேன்.
ஆனால், ஒரு விஷயம் சொல்ல வேண்டும்… இந்த வயதிலும் என் கர்ப்பம் பற்றி மக்கள் இவ்வளவு ஆர்வமாக பேசுவது பார்த்தால் எனக்கு சிரிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
8 minute ago
22 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
32 minute ago
37 minute ago