Freelancer / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறாவது முறையாக சிம்பு மற்றும் ஏஆர் ரஹ்மான் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு நடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ’அச்சம் என்பது மடமையடா’ ’செக்கச் சிவந்த வானம்’ ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’பத்து தல’ ஆகிய ஐந்து படங்களுக்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க நடிப்பதாகவும் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிம்புவின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இதுதான் என்றும் அவர் தனது இரண்டு வித்தியாசமான வேடங்களுக்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
15 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
2 hours ago