Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளிதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் டெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார். இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago