Editorial / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.
இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரபல பொலிவுட் நடிகை ப்ரிணிதி சோப்ராவிடம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம். பிரபல டென்னிஸ் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கைப் படத்தில் ப்ரிணிதி சோப்ரா நடிப்பதால், கோல்ஷீட் பிரச்சினை காரணமாக, அவர் நடிக்க மறுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026