2025 மே 02, வெள்ளிக்கிழமை

அனிருத்தால் தாமதம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது.

முன்னதாக, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது ’நெல்சன் கதை சொல்ல வீட்டுக்கு வரும்போது லேட்டாக வந்தார்’ என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் நெல்சன் ’ரஜினிக்கு கதை சொல்ல தாமதமாக போனதற்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார்.

ரஜினிக்கு கதை சொல்ல செல்வதற்கு முந்தைய நாள் இரவு அனிருத் ஸ்டுடியோவில் அதிகாலை 4 மணி வரை இருந்ததாகவும் அதனால் தான் தன்னால் சரியான நேரத்திற்கு போக முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் ரஜினிக்கு கதை சொல்ல தாமதமாக நெல்சன் போனதற்கு காரணம் அனிருத் தான் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X