George / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக (இரண்டு கோடி இருபது இலட்சம்) இன்று ஞாயிற்றுக்கிழமை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தன்னை பின்தொடரும் அனைவருக்கும் அமிதாப் பச்சன், நன்றி தெரிவித்துள்ளார்.
அமிதாப்புக்கு அடுத்தபடியாக, டுவிட்டரில் ஷாருக்கானை 20.8 மில்லியன் பேரும், சல்மான் கானை 19 மில்லியன் பேரும், அமீர் கானை 18.3 மில்லியன் பேரும், பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நிலவரப்படி அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடி எழுபது இலட்சமாக இருந்த நிலையில் 11 மாதங்களில் அவரை சுமார் 50 இலட்சம் பேர் புதிதாக பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago