Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமலா பாலின் முன்னாள் கணவரும், இயக்குனருமான ஏ.எல்.விஜய்க்கு இன்று இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் இயக்குநர் விஜயக்கு ஏற்பட்ட நட்பை அடுத்து இருவரும் காதலித்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் அதை இருவருமே மறுத்த நிலையில், அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்குவதற்கு ஏ.எல். விஜய் ஆயத்தமாகி வருகிறார்.
இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.
பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2ஆவது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டாவது திருமணம் என்பதால், ஏ.எல்.விஜய்க்கு மிகவும் எளிமையான முறையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மணமக்கள் மற்றும் விஜய்யின் பெற்றோர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் மணமுடித்த பெண் ஐஸ்வர்யா. இவர் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா, பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago