Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கணவரும், இயக்குனருமான விஜய் 2ஆவது திருமணம் செய்துகொண்ட நிலையில், தானும் 2ஆவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நடிகை அமலாபோல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமலாபோல் கூறியதாவது: “எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் பல வெற்றி, தோல்விகளை கடந்து வந்துள்ளேன்.
திருமண முறிவுக்கு பிறகு நான் தனித்து விடப்பட்டது போல் இருந்தது. நான் சென்ற இமயமலை பயணம்தான். அதிலிருந்து என்னை மீட்டெடுத்து பக்குவப்படுத்தியது
என் சுதந்திரத்தையும், துணிச்சலையும் காட்டத்தான் ஆண்களை போல் கிராப் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் அப்படித்தான்.
ஏன் கொடுக்கக்கூடாது என்ற கேள்வியில் பிறந்ததுதான் ரம்யாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது கூட. மைனா படத்துக்கு பிறகு என் மனதுக்கு நிறைவாக எந்த படமும் அமையவில்லை. ஆடை படம் மட்டுமே அமைந்துள்ளது.
மறுமணத்தில் நம்பிக்கை இருக்கிறது. கட்டாயம் 2வது திருமணம் செய்துகொள்வேன். குழந்தையும் பெற்றுக்கொள்வேன். மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பேன்.” என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .