2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஆச்சி மனோரமா அக்கினியுடன் சங்கமம்

George   / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல், இன்று இரவு 7 மணியளவில் மைலாப்பூர் கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

மாலை 4 மணியளவில் மனோரமாவுக்கு இறுதி சடங்குகள், நடத்தப்பட்டு மைலாப்பூரில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வீதியின் இருபுறங்களிலும் ஏராளமானோர் கூடி அஞ்சலி செலுத்தினர். மாலை 6.30 மணியளவில் மைலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மயானத்தை வந்தடைந்தது.

பின்னர் 7 மணியளவில் மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மயானத்துக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .