2025 நவம்பர் 05, புதன்கிழமை

இரட்டை வேடத்தில் தளபதி ‘68’

Janu   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

லியோ  படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு முதல் தடவையாக விஜய் படத்தை இயக்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இது ஒரு கிராமிய அரசியல் ஆக்ஷன் திரைப்படம் எனவும்  தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும் மற்றொரு விஜய்க்கு ஜோதிகாவும் ஜோடியாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. பிரத்யேக அறிவிப்பு என்னவென்றால், குழு இந்த வாரம் லண்டனுக்கு புறப்பட உள்ளது. தளபதி 68 திரைப்படம் அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரும்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X