Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
போகன் திரைப்படத்துக்குப் பின்னர், நடிகை ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. அதனால், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தயாராகிவரும் “வில்லன்” திரைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ள ஹன்சிகா, தெலுங்கிலும் இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அதோடு, தமிழில் கொடிவீரன் திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அவர்கள் சொன்ன சம்பளம் மிகக்குறைவாக இருந்ததால், கடைசி நேரத்தில் விலகினார். அதேநேரம், விஷ்ணு போன்ற நடிகர்களுடன் வாய்ப்பு கிடைத்த போதிலும், அவற்றையும் தட்டிக்கழித்துள்ளார்.
இந்நிலையில், பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு, ஹன்சிகாவுக்குக் கிட்டியுள்ளது. இதனால், மறுபடியும் விட்ட மார்க்கெட்டைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஹன்சிகா, சுந்தர்.சியின் சங்கமித்ரா திரைப்படத்தில் எப்படியேனும் இடம்பிடித்து விட வேண்டும் என்பதற்கான முயற்சியிலும் தீவிரம் காட்டிவருகிறார்.
அந்தத் திரைப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறியதை அடுத்து, நயன்தாரா, அனுஷ்கா என முன்னணி நடிகைகள் யாரும் 2 வருடங்களுக்கு கோல்சீட் கொடுத்து நடிக்க முன்வராததால், ஹன்சிகாவின் முயற்சிகள் வர்க்அவுட்டாகும் சூழ்நிலை நிலவிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago