George / 2015 நவம்பர் 03 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் கிராமத்து கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டதையடுத்து, தொடர்ந்து கிராமத்து கதைகளாகவே ஸ்ரீதிவ்யாவை துரத்தின.
கிராமத்து கதைகளில் நடிக்கும் நடிகைகளுக்கு சம்பளத்தை உயர்த்தியே தரமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட ஸ்ரீதிவ்யா, நகரத்து கதைகளாக தேடிப்பிடித்து நடித்ததுடன் கவர்ச்சி கதவுகளையும் திறந்து விட்டார். ஆனால், அப்படி அவர் நடித்தத் திரைப்படங்கள் வெற்றி பெறாததால் அவரது மார்க்கெட் மந்தமாகி விட்டது.
இந்நிலையில், குட்டிப்புலி, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா விஷாலை வைத்து இயக்கும் மருது திரைப்படத்தை கைப்பற்றியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
ஆனால், இந்தத் திரைப்படத்தில் இவருக்கு கிராமத்து பெண் வேடம்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதனையடுத்து, கவர்ச்சியை ஓரம்கட்டிவிட்டு கிராமத்து பெண்ணாக நடிக்க ஒப்புகொண்டுள்ளாராம் ஸ்ரீதிவ்யா.
அதேவேளை, இந்தத் திரைப்படத்தில், நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றொரு ஆச்சரியமான செய்தியும் வெளியாகியுள்ளது.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago