Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடாரம் கொண்டான் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், விக்ரமை வைத்து கடாரம் கொண்டான் திரைப்படத்தை உருவாக்கியது.
முதலில் இப்படத்தில் கமலஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் கமல் நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
கடாரம் கொண்டான் படம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானதுடன், இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாக வில்லை. மலேசிய பொலிஸாரை படத்தில் தவறாக சித்தரித்துள்ளதால், Film Censorship Board of Malaysia இப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
இதனை பட விநியோகம் செய்யும் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago