Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் சேரனும், லொஸ்லியாவும் ஆரம்பத்தில் இருந்து தந்தை-மகள் என நெருக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த வார டாஸ்க்கில் லாஸ்லியா சரியாக நடிக்கவில்லை என சேரன் கூறியது லொஸ்லியாவை ரொம்பவே காயப்படுத்திவிட்டது.
ஒரு தந்தையாக தான் லாஸ்லியா மீது அன்பு செலுத்தினாலும், ஒரு நேர்மையாளராக தான் நடந்து கொண்டதாகவும் சேரன் நேற்று கமலிடம் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
மகளாக இருந்தாலும் லொஸ்லியாவிடம் அவரது குறையை தனியாக தெரிவித்துவிட்டு, சபையில் லொஸ்லியாவுக்கு சேரன் ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
சேரன் தன்னிலை விளக்கம் அளித்தும், லொஸ்லியாவை சமாதானப்படுத்தியும் லொஸ்லியா இன்று சேரனை நொமினேட் செய்தார். இது பார்வையாளர்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை.
இந்த நிலையில் சேரனை நொமினேஷன் செய்தது தவறோ என்ற எண்ணத்தில் கவினிடமும், தர்ஷனிடமும் லொஸ்லியா சொல்லி அழுவது போன்று இன்றைய அடுத்த ப்ரமோ வீடியோவில் உள்ளது.
ஒரு முடிவை எடுத்த பின்னர் அந்த முடிவை ஆராய்வது தேவையற்றது என்று எடுத்து கூற பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு ஆள் இல்லை.
பிக்பாஸ் வீட்டில் ஜெயிக்கப்போவது பாசமா? போட்டியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day57 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/j6VPVl0X8L
— Vijay Television (@vijaytelevision) August 19, 2019
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .