George / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் கபாலி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அதே பெயரில் மற்றுமொரு தமிழ்த் திரைப்படம் தயாராகி வருகின்றதாம்.
கபாலி டாக்கீஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை எம்.ஆர்.சாய்சித்ரா என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
கிடா பூசாரி மகுடி திரைப்படத்தில் நடித்து வரும் தமிழ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. புறம்போக்கு திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் வர்ஷன் இசையமைக்கிறார்.
பலத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.
மயிலாப்பூர் கபாலி டாக்கீஸ் அந்தக் காலத்தில் பிரபலம். இந்த திரைப்படம் சினிமாவை பற்றியது என்பதால் கபாலி டாக்கீஸ் என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சினிமா வளர்ந்த விதம், சினிமாவில் தற்போதுள்ள பிரச்னைகளை பேசுகிற திரைப்படம். ஹொலிவூட் ஸ்டூடியோக்களுக்கும் சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் இயக்குநர் ரவி சீனிவாஸ்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025