Editorial / 2020 மே 03 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமல்ஹாசனின் நீண்ட நாள் கனவாக அமைந்திருந்த திரைப்படம் மருதநாயகம். கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி சென்னை வந்தபோது இப்படத்தைத் தொடங்கி வைத்தார்.
அதன் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டு நடித்தார். ஆனால், நிதிப் பிரச்சினை காரணமாகத் தொடர முடியாமல் நின்றுபோனது.
மீண்டும் இந்தத் திரைப்படம் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு அதிர்ச்சியான பதில் அளித்திருக்கின்றார் கமல்.
கமல் கூறும்போது, “மருதநாயகம் படம் 40வயது நடிகர் நடிக்க வேண்டிய திரைப்படம். நிதிப்பற்றாக்குறையால் நின்று போனது. இப்போது நிதி கிடைத்தாலும் நான் நடிக்க முடியாது.
இப்போது எனக்கு வயது கடந்துவிட்டது. நான் நடிக்க வேண்டுமென்றால் கதையை மீண்டும் மாற்றி எழுத வேண்டும் அல்லது 40வயதில் உள்ள வேறு நடிகர் நடிக்க வேண்டும்”என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .