Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு, நாளை (10) தொடங்கவுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படம் பற்றி புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
'பாபநாசம்' திரைப்படத்தில், கமல்ஹாஸனின் மகளாக நடித்த நிவேதா தோமஸ், முருகதாஸின் திரைப்படத்தில், ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், 34 வயதாகும் நயன்தாரா, 23 வயது நிவேதாவுக்கு அம்மாவாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்துவந்த நயன்தாரா, தனது கொள்கையைத் தளர்த்தி, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், தன்னை விட 11 வயதே சிறியவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணம் என்னவென்று, திரையுலகத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago