Editorial / 2022 நவம்பர் 02 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நடிகை ஹூமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹூமா குரேஷியின் மூன்று ஆண்டு காதல் முறிந்துவிட்டதாக ஹிந்தி திரையுலகில் தகவல் பரவி வருகிறது. நடிகை ஹூமா குரேஷி பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினியின் காலா படம் மூலம் அறிமுகமானார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் அஜித்தின் காதலியாக நடித்திருந்தார். ஹூமா குரேஷி பாலிவுட், கோலிவுட் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்துள்ளார்.
தற்போது ஹூமா குரேஷி ஹிந்தியில் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். ஹூமா குரேஷி நடித்துள்ள மோனிகா ஓ மை டார்லிங், டபுள் எக்ஸ் எல் ஆகிய இரண்டு படங்களும் நவம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளன.
ஹூமா குரேஷி 3 ஆண்டுகளாக முடாசர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹூமா குரேஷி முடாசருடன் இருந்த காதலை முறித்துக்கொண்டார் என்ற தகவல் ஹிந்தி திரையுலகில் பரவி வருகிறார். முடாசர் ஏற்கனவே நடிகை சுஷ்மிதாவை காதலித்து 2010 ஆம் ஆண்டில் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.



2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago