Editorial / 2020 மே 03 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' திரைப்படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'சைரா' படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்தில் கதாநாயகியாக முதலில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பதால் 'ஆச்சார்யா' படத்திலிருந்து த்ரிஷா விலகினார்.
அதனையடுத்து, த்ரிஷாவுக்குப் பதிலாக காஜல் அகர்வாலை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள். இப்போது காஜல் அகர்வாலும் அப்படத்திலிருந்து விலகுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி 2' படம் உருவாக உள்ளதாம். இப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தில் நடிப்பதற்காகவே சிரஞ்சீவி படத்தை காஜல் அகர்வால் கை கழுவிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்து.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .