Freelancer / 2023 ஜூலை 25 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல கன்னட நடிகரான சுதீப், தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுதீப்பை கன்னட ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில் ஹெப்பிலி என்ற கன்னட படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமாக சிகை அலங்காரம் செய்து இருந்தார். இதை பார்த்த மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பாடசாலைக்குச் செல்கின்றனர்.
இதனால் கடுப்பான சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பாடசாலை ஆசிரியர்கள் அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை பார்த்து பள்ளி மாணவர்களும் தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பாடசாலை மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் சிகை அலரங்காரம் செய்ய வேண்டாம்'' என்று கூறியுள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago