Editorial / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ். அப்போது முதல் இருவரும் காதலித்து, ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். அனைத்து விழாக்களிலும் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டார்கள். தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்திலும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால், இருவரும் ஆரம்பத்தில் வெளிப்படையாகக் காதலை அறிவிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. ஆனால், திருமணம் குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது இதனிடையே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் இரண்டு குடும்பத்தினர் சூழ நடைபெற்று இருக்கிறது. இதன் புகைப்படங்களை இருவருமே கூட்டாக அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.





17 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
9 hours ago