Freelancer / 2023 ஜூலை 11 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் இன்று தன்னுடைய, விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய், ஒரு பக்கம் தன்னுடைய திரையுலகில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொரு புறம் அரசியலில் கால் பாதிக்கும் நேரத்தையும், எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
பல உதவிகளை பலவாறு செய்து வரும் விஜய் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டம் தோறும் முதல் 3 இடங்களை பிடித்த, மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பில் 600 / 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு 10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியதுடன், ஊக்கத்தொகையும் கொடுத்தார் விஜய். அதே போல் இந்த நிகழ்ச்சியில் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயங்களும் கவனத்தை ஈர்த்தது.
ஒரு தரப்பினர் விஜய்யின் இந்த செயல்களை பாராட்டி வந்தாலும், மற்றொரு தரப்பினர்... இப்படி செய்வதால் மட்டுமே விஜய் அரசியல் வாதியாக மாற முடியாது. தேர்தலில் நின்று வெற்றி பெற கட்சியில் தீவிரமாக இறங்கி பணியாற்றவேண்டும் என தெரிவித்து வந்தனர்.
விஜய்யும் தீவிர அரசியலில் இறங்கும் முயற்சியில் இருப்பதால்... தன்னுடைய 68-ஆவது படத்தில் நடித்து முடித்த பின்னர், 3 வருடங்கள் முழு அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும் சில தகவல்கள் வெளியான நிலையில்.. தற்போது, விஜய் இன்று காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விஜய் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி... அரசியலில் கவனம் செலுத்த உள்ளதை அறிவிப்பாரா? என கேள்விகள் எழுந்துள்ளதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. R
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025