Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் 3 திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ருதிஹாசன், அதன்பின்னர், திரைப்படங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தவில்லை. பாட்டுப்பாடி, நடனமாடி அல்பம் தயாரித்து வெளியிடுவதிலேயே கவனம் செலுத்திவந்தார்.
ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வந்தார். தற்போது, எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக, “இலாபம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் ஒரு ஹிந்தித் திரைப்படத்தில் தாதாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். “பவர்” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில், வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
அக்ஷன், த்ரில்லராக எடுக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படத்தை, மகேஷ் மஞ்சிரேக்கர் என்பவர் இயக்குகிறார். நிழல் உலகத் தாதாக்களின் கதையைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுவரும் இந்தத் திரைப்படத்தை, ஜூலை 12இல் வெளியிட, படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
36 minute ago
43 minute ago