Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன், திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ’மகா’ என்ற த்ரில் படத்திலும் நடித்து வருகிறார்.
அந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடித்த ’பாகமதி’ படத்தை இயக்கிய அசோக் இயக்கத்தில் ஒரு வெப்சீரிஸ் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இது ஒரு விறுவிறுப்பான திகில் தொடர் என்றும் இந்தத் தொடர் தொலைக்காட்சி ரசிகர்களிடையே ஹன்சிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கெனவே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான அஞ்சலி, அமலாபால் ஆகியோர் வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தற்போது ஹன்சிகாவின் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago