Ilango Bharathy / 2021 ஜூலை 17 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தொற்றுப்பரவல் காலத்தில் இடைவிடாமல் இந்திய மக்களுக்கு உதவி வருகிறார் பிரபல பொலிவூட் நடிகர் சோனு சூட்.
குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கு இவர் செய்து வரும் உதவிகள் ஏராளம்.

இதனால் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மும்பையிலுள்ள அவரது வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் சோனு சூட்டைக்காண காலில் செருப்புக் கூட அணியாமல் 1200 கிலோ மீற்றர் சைக்கிளில் பயணித்துள்ளார்.
சைக்கிளில் சோனு சூட்டின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு மலர் மாலையுடன் அவரைப் பார்க்க வந்த ரசிகரை சற்றும் எதிர் பார்க்காத சோனு சூட் அவரை கைகூப்பி வரவேற்று அவருக்கு புதியதாக செருப்பு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

7 minute ago
9 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
24 minute ago
1 hours ago