Editorial / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சத்தீஸ்கர் மாநிலத்தில், ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாதம் ரூ.1000 அனுப்பப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விசாரணையில், அம்மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரில் கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை பெயரில் போலி கணக்கை உருவாக்கி அரசுத் திட்டத்தில் மோசடி செய்த விவகாரம், அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி குறித்து பாஜக அரசை, காங்கிரஸ் குறை கூறியது. ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் பணம் பெறும் 50 சதவிகித பயனாளிகள் போலியானவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எனது பெயரையும் அடையாளத்தையும் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் அவர்கள் பயனடையவும் உருவான திட்டத்தில் இப்படியொரு மோசடி நடந்திருப்பது வருந்தத்தக்கது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபற்றி முழுமையாக விசாரிக்கும் அதிகாரிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026