Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010ம் ஆண்டில் வெளிவந்த ’களவாணி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா. அதன் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவின் வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும் ரசிகர்களை ஈர்த்தது. அதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர். திரையுலகில் கிடைக்காத புகழும் பிரபலமும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை ஓவியா, பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு நடிகை ஓவியா ஒரு லெஸ்பியன் என்று சொல்லப்படுகிறதே என்கிற கேள்விக்கு பதிலளித்த ஓவியா, ”நடிகை என்றாலே இப்படிப்பட்ட பிரச்சினைகள், வதந்திகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கடந்து போய் கொண்டேயிருக்க வேண்டும். நான் லெஸ்பியன் கிடையாது” என்று பதில் அளித்துள்ளார்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago