Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்பெல்லாம் நடிப்பு சரியில்லை என்றால் மட்டுமே ரீ-டேக் கேட்டு வாங்கி நடித்த நயன்தாரா, இப்போது தன்னை அழகாக காட்டவில்லை என்றாலும் ரீ-டேக் கேட்டு வாங்கி நடித்து வருகிறாராம்.
ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, அப்போது தக தக தகவென மின்னினார். அதனால், அவருக்கு அதிகளவில் மேக்கப் தேவைப்படவில்லை. சாதாரணமான ஒளிப்பதிவாளர்கள்கூட அவரை அழகாக காண்பித்தனர்.
ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. ஒளிவீசிய சூரியனாக திகழ்ந்த நயன்தாரா, தற்போது 30 வயதை கடந்து விட்டதால் மங்கிய நிலவாகி விட்டார். அதனால், ஆரம்பகாலத்தில் அவருக்கு சுமாராக மேக்கப் போட்டவர்கள் இப்போது பளிச்சென்று காட்டும் மேக்கப்பை போடுகிறார்கள்.
இருந்தாலும், சில திரைப்படங்களில் அழகாக தெரியும் நயன்தாரா, சில திரைப்படங்களில் சுமாராக தெரிகிறார். இதனால் அவரது ரசிகர்கள் இது நயன்தாராவா இல்லை வேறு எவருமா? என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு அவரது தோற்றம் வெளிப்பட்டு வருகிறது.
இதுவரை தனது அழகு பற்றி எந்த கவலையும் படாமல் இருந்து வந்த நயன்தாராவுக்கு இணையதளங்களில் ரசிகர்கள் சொல்லும் கருத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால், இப்போது அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். அதோடு, மேக்கப் விடயத்திலும் அதிக கவனம் செலுத்தும் நயன்தாரா, ஒளிப்பதிவாளர்களிடம் தன்னை அழகாக காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றாராம்.
அதோடு, தான் ஒவ்வொரு காட்சியில் நடித்து முடித்ததும் அதை திரையில்; பார்க்கும் நயன்தாரா, அதில் தான் அழகாக இல்லை என்றால் அந்த காட்சியை மீள்படபிடிப்பு செய்யுமாறு இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago
16 May 2025