J.A. George / 2022 ஜூன் 14 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்க்கும் ஜூன் 9ஆம் திகதி சென்னையில் திருமணம் நடந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையானை சென்று தம்பதிகள் தரிசித்தனர்.
பின் மீண்டும் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில் தற்போது கேரளாவில் நயன்தாராவின் அம்மாவின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து நயன் - விக்கி தம்பதிகள் அடுத்ததாக தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கி விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியே வந்த போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
கொச்சியில் நயன்தாராவின் அம்மா வீட்டில் புதுமண தம்பதிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது என்றும், அதன் பின் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலும் சிறப்பு விருந்து தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
வெளிநாட்டில் யாருமில்லாத தீவுகளை நயன்தாரா தேனிலவுக்கு தேர்வு செய்ததாகவும் அந்த தீவில் இருவரும் சுமார் இரண்டு வாரங்கள் வரை காலத்தை கழிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹனிமூன் முடிந்து சென்னை திரும்பிய உடன் தான் அஜித்தின் அடுத்த திரைப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியை விக்னேஷ் சிவன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago