Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக நடிகை சமந்தாவும் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் தாய் மொழி தமிழ்தான் என்பதும், இவர் சென்னையை அடுத்த பல்லாவரத்தில்தான் பிறந்து, வளர்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
கடந்த வாரம் பெய்த கடும் மழையின் போது வெளியூரில் படப்பிடிப்பில் சமந்தா இருந்தாலும் சென்னையை புரட்டிப் போட்ட மழையில் அவருடைய பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்காரணமாக, அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் பெரிதும் பரிதவித்து போயுள்ளார் சமந்தா.
'சென்னையில் ஏற்பட்ட கடும்மழையின் போது 3 நாட்களாக எனது பெற்றோரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் போன வாரம் முழுவதும் என்னால் தூங்கக்கூட முடியவில்லை. என்னுடைய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள்கூட இந்த வெள்ளத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் மிகவும் பரிதவித்துப் போனேன். அதுமட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தில் ஏராளமான பொதுமக்களும் சிக்கி, உணவு, தண்ணீர்கூட இல்லாமல் பரிதவித்தது எனக்கு மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியது' என்று சமந்தா கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago