2026 மார்ச் 05, வியாழக்கிழமை

பிரபல நடன இயக்குனர் ஜானி தலைமறைவு

Freelancer   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில் பிரபல நடன இயக்குனர் ஜானி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

திரையுலகில் பிரபல நடன இயக்குனராக அறியப்படுபவர் ஜானி. முன்னணி திரையுலக நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர். தேசிய விருதையும் வென்றிருந்தவர். 40 வயதான அவர் மீது 21 வயது உதவி நடன இயக்குநர் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் பொலிஸ் நிலையத்தில் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள தருணத்தில் இருந்து, அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

இது குறித்து துணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “குறித்த பெண் உதவி இயக்குனர் அளித்த புகாரை முழுமையாக பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜானி தலைமறைவாக உள்ளார். சம்பவம் நடைபெற்ற காலத்தில் புகார்தாரரின் வயது 18 வயதை பூர்த்தி அடையவில்லை.

எனவே உரிய விசாரணையைத் தொடர்ந்து ஜானி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவாகுமா, இல்லையா என்பது தெரிய வரும். தகுந்த நடவடிக்கை கட்டாயம் எடுப்போம்” என்று அவர் கூறினார்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .