Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணுக்கு அலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயண், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
ஷங்கர் இயக்கிய காதலன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த உதித், ரஜினியின் முத்து, சிவாஜி, கமலின் காதலா, காதலா, அன்பே சிவம், விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மதுர, ஷாஜஹான், பகவதி, திருமலை, கில்லி, சிவகாசி, குருவி, தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில், அலைபேசி ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை அம்போலி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், திருடப்பட்ட அலைபேசியில் இருந்து உதித் நாராயணுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago