2025 நவம்பர் 19, புதன்கிழமை

பிறந்தநாளில் தல அஜித் குறித்த சுவாரஸ்யங்கள்

Editorial   / 2020 மே 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜித்தின் 49ஆவது பிறந்தநாள் இன்று. ஊடகங்களிடம் பேசுவதை அஜித் நிறுத்தியிருந்தாலும், அவர் குறித்த ஏதேனும் ஒரு செய்தி எப்போதுமே அவரின் ரசிகர்களால் ஊடகங்களில் வலம் வந்துகொண்டே இருக்கும். 

அஜித் குறித்த சுவாரஸ்யங்கள் இங்கே...

பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பைக் ஷெட்டில் மெக்கானிக் வேலை பார்த்தவர் நடிகர் அஜித். அந்த இடம்தான் அவர் பைக், கார் ரேஸை விரும்புவதற்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது.

சினிமாத்துறையின் தொடக்க காலத்தில் அஜீத்துக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். பின்னர், 'பிரேம புஸ்தகம்' என்கிற தெலுங்குப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். 

ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் படத்தின் இயக்குநர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால் இறந்துவிட, அவரது தந்தையால் அந்தப் படம் இயக்கப்பட்டது.

அமராவதி' படத்தின் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம். அதைத் தொடர்ந்து பாசமலர்கள் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்தார்.

பைக் ரேஸில் ஏற்பட்ட விபத்து காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது வந்த 'பவித்ரா' பட வாய்ப்பையும் ஏற்றுக் கொண்டு, அந்தப் படத்திலும் நடித்தார். 

அதுவரையில் அஜித் என்கிற நபர் பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை. ஆனால், அதன்பிறகு வெளியான 'ஆசை' திரைப்படம் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

'அமர்களம்' படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஷாலினியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலை வெளிப்படையாக அஜித் வெளிக்காட்ட அதற்கு வெட்கப்புன்னகையை பதிலாக உதிர்த்திருக்கிறார் ஷாலினி. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அஜித் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புபவர். தன்னுடைய வீட்டில் இன்டீரியர் டிசைனில் அதிக அக்கறை காட்டுபவர்.

புகைப்படங்கள் எடுப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதேபோல், தனக்கு ஆர்வமான விஷயங்களை தேடித் தேடி கற்றுக் கொள்வது அவர் வழக்கம்.

"நான் ஒரு நடிகன் மட்டுமே.. நீங்கள் என்னை ரசித்துவிட்டு உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்," என்பதே அவர் ரசிகர்களிடம் சொல்ல விரும்பியது. அதற்காகவே, அவர் ரசிகர்மன்றங்களை வேண்டாம் எனக் கூறினார்.

பொதுவாக படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கோ அல்லது படத்தின் எந்தவொரு புரொமோஷன் நிகழ்ச்சிக்கும் அஜித் வருவதில்லை.

அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அவரே தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறினார் என்னும் செய்தியை நாம் அவ்வப்போது ஊடகங்களில் பார்க்கலாம்.

"பேட்டியின் போது நாம் கேட்கிற கேள்விக்கு அவர் நேர்மையாக பதில் அளிப்பார். பதில் அளித்த பிறகு தான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கமாட்டார். பொதுவாக எல்லா திரை நட்சத்திரங்களிடமும் எல்லாத் துறையை பற்றியும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அஜித்திடம் எந்தத் துறைசார்ந்த கேள்விகளாக இருந்தாலும் கேட்கலாம்," என அவரை பேட்டி எடுத்த சில மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அஜித் 'முழிச்சிக்கோ விழிச்சிக்கோ' என்கிற சன்ரைஸ் விளம்பரம்தான் அவர் கடைசியாக நடித்த விளம்பரம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X