2025 மே 14, புதன்கிழமை

மீண்டும் தள்ளிபோகும் தொடரி

George   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தொடரி. கீர்த்திசுரேஷ், தம்பிராமைய்யா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தனது கதாபாத்திரம் பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடாத தனுஷ், நாயகி கீர்த்தி சுரேஷ்க்குத்தான் முக்கியமான வேடம் என்று மட்டுமே கூறி வருகிறார். அதோடு, சில மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்ட தொடரி, கபாலிக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒருகட்டத்தில் கபாலியைக் கண்டு மற்ற திரைப்படங்கள் பின் வாங்கியது போன்று தனுஷ் திரைப்படமும் பின்வாங்கியது.

அதனையடுத்து, தொடரியை ஓகஸ்ட் 12ஆம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது அதேநாளில் தர்மதுரை, வாகா போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருப்பதால், ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு தொடரி வெளியீட்டை மாற்றி வைத்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .