Freelancer / 2023 ஜூலை 11 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகவுள்ளதால் ஆந்திராவிலும் இந்த படத்தை படக்குழுவினர் ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் சிங்கிள் சாட்டில் கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் வில்லன் நடிகர்கள் மோதிய இந்த ஸ்டண்ட் காட்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். ஏற்கெனவே இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
15 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
2 hours ago