Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார் நயன்தாரா.
இந்த நிலையில், பிரமாண்டமாக தெலுங்கில் தயாராகவுள்ள ராமாயணம் 3டி படத்தில் நடிகை நயன்தாரா, மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தனியாக ஹிரோயினாக நடிக்கும் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் 3டியில் மிக பிரமாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக உள்ளது. இந்தியாவில் இதுவரை ராமாயணம் பல வடிவங்களில் வந்திருந்தாலும் 3டியில் உருவாவது இதுவே முதல் முறை.
இப்படத்தில் மீண்டும் சீதையாக நடிக்க நயந்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ஹிந்தியில் தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர்.
மூன்று பாகங்களாக இப்படம் உருவாக உள்ளதுடன், ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ராமாயணம் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறன. படத்தின் படப்பிடிப்பு வரும் டிசெம்பரில் தொடங்குமென தெரிகிறது. முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கு அண்மையில், நடிகர் ராதாரவி நடிகை நயந்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அப்போது பேயாகவும் நடிக்கிறார். சீதையாகவும் நடிக்கிறார் என்று ராதாரவி நயன்தராவை பற்றி பேசினார்.
தற்போது நயன்தரா சீதையாக நடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் ராதாரவி என்ன சொல்வாரோ? என்பதுதான ரசிகர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வி!.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
44 minute ago
46 minute ago