Ilango Bharathy / 2021 ஜூலை 02 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திலுள்ள "மேஹெரசைலா" என்ற பாடல் தான் அண்மையில், யுடியூப் தளத்தில் வெளியாகி 2.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிம்பு சமைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இக்காணொளியில் சிம்பு வல்லவன், மன்மதன் படங்களில் இருப்பதை போலவே தோற்றமளிக்கிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவரின் பழைய புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களை வைத்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.

குறிப்பாக "15 years challenge, then STR is picasso in it" என்ற வரிகளுடைய மீம்ஸ்கள் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப்புகைப்படங்களில் 15 வருடங்களுக்கு முன்பு மன்மதன் படத்தில் இருப்பது போலவே சிம்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
46 minute ago
1 hours ago